Home இலங்கையாழில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்!

யாழில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்!

by admin

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.10.23) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை பட்டா ரக வாகனத்தில் சென்ற வன்முறை கும்பல் ஒன்று வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க , இளைஞன் முச்சக்கர வண்டியை கைவிட்டு வீதியில் ஓடிய போதிலும் , துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More