364
யாழ்ப்பாணம் – அச்சுவேலி வைத்தியசாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.ஆவரங்காலில் உள்ள சுபாஷ் டிராவல்ஸின் குடும்பத் தலைவர் இ.லோகேஸ்வரனால் குறித்த பொருட்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பொருட்களில் சுத்திகரிப்பு பொருட்கள், தொற்றுநோய் நீக்கிகள், அலுவலகப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் என்பனவும் உள்ளடங்குகின்றன.
Spread the love