421
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபவனி நடைபெறவுள்ளது. நல்லூர் கோவில் பின்புறத்தில் இருந்து பருத்தித்துறை வீதி வழியாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை வரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபவனி இடம்பெறவுள்ளது.
அதேவேளை நாளை மறுநாள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நிறைவுவிழா இடம்பெறவுள்ளது. அந்நிகழ்வில், கல்வி அமைச்சர் சுசில்பிரேம்ஜெயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில் கலாசாலையின் நூற்றாண்டு சஞ்சிகையாகிய கலைமலர் வெளியீடு அஞ்சல் திணைக்களத்தின் இருபத்தைந்து ரூபா முத்திரை வெளியீடு, முன்னாள் அதிபர்மார் கௌரவிப்பு என்பன இடம்பெறவுள்ளதாகவும் கலாசாலை அதிபர் ச.லலீசன் தெரிவித்தார்.
Spread the love