Home இலங்கைபருத்தித்துறை காவற்துறை  தொடர்பிலான விசாரணை ஆரம்பம்!

பருத்தித்துறை காவற்துறை  தொடர்பிலான விசாரணை ஆரம்பம்!

by admin

பருத்தித்துறை காவற்துறை  தொடர்பிலான விசாரணை உதவி காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி காவற்துறை  மாஅதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில், அண்மையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின் போது பருத்தித்துறையில் காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் உரிய விசாரணை உதவி காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாவட்ட பிரதி காவற்துறை அதிபர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More