Home இலங்கை ஜனாதிபதி மாளிகையை கொடுக்காதீர்கள்

ஜனாதிபதி மாளிகையை கொடுக்காதீர்கள்

by admin

யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அந்த அறிக்கையில்,
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம்,உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட அரச அதிபர் மாளிகையாவும் பயனற்று உள்ளது.
 இவ் அரச மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அல்லது இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
ஆதிச்சிவன் கோயில் மடங்கள் இருந்த இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 இதை விடுத்து தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் இவற்றை ஒப்படைக்க கூடாது.
 இது தனியார் நிலங்களிலும் சைவ சமய நிறுவனங்களின் நிலங்களிலும் போரை பயன்படுத்தி கட்டப்பட்டது. கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்கள் போகமுடியாமல் கடற்படையின் பொறுப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிக வேதனையான விடயம்.
 இப்பகுதியில் இருந்த சித்தர்களின் சமாதிகள் பல உடைக்கப்பட்டு விட்டன. இது நாட்டுக்கு கெடுதியானவை. எனவே இவற்றை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தென்னிலங்கை சார்ந்த வாணிப நிறுவனங்களுக்கு கையளிக்க கூடாது.
 இது திட்டமிட்ட அநியாய செயற்பாடு. இவ்விடயம் தொடர்பாக கெளரவ ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
காங்கேசன்துறை பலாலி வீதியில் சிவபூமி அறக்கட்டளைக்கு உரித்தான சுக்கிரவார திருகோணசத்திரம் இராணுவ நலன்புரிச்சங்கம் இயங்குகின்ற தல்செவன ஹோட்டல் தமது பயன்பாட்டிற்கு வைத்துள்ளார்கள்.
 நூற்றியாறு பரப்பு கொண்ட சைவ சமய நிறுவனத்தின் மடத்தை அழித்து ஹோட்டல் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது நீதியற்ற செயல் உடனடியாக தல்செவன ஹோட்டலின் பயன்பாட்டில் உள்ள சமய நிறுவனத்தின் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More