328
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுதிட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவை தலைவர் சி வி கே சிவஞானம், ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச செயலர்கள் அடங்கிய குழுவை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Spread the love