யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அங்கஜன் இராமநாதன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை ஒன்று இயங்கி வருகின்றது. அந்த வீட்டுக்கு செல்வோர் வீட்டின் அழைப்பு மணியை (ஹோலிங் பெல்) அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்து செல்கின்றனர். இந்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் எனவும் பணித்தார்.