376
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரிமலை பகுதியை சேர்ந்த ஜோசப் சுதர்சன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கல்லுண்டாய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட் டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினா் காரின் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love