403
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது சைக்கிள் முன் கூடைக்குள் கைப்பையை வைத்து சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த நபர் ஒருவரை கூடைக்குள் இருந்த கைப்பையை அபகரித்து சென்றுள்ளார்.
கைப்பைக்குள் ஐந்தேகால் பவுண் நகை , 90 ஆயிரம் ரூபாய் பணம் , பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன இருந்ததாக தெரிவித்து கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது.
Spread the love