இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. தென் இலங்கையில், கொழும்பிலிருந்து சுமார் 1326 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12:31 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது