நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன்போது, காவல்துறையினரின் விண்ணப்பத்தை நிராகரித்த எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள், இறந்த உறவினர்களை நினைவு கூறுவது எவ்விதத்திலும் பயங்கரவாத செயலாகாது.
கோரினர்.
விசாரணைகளை அடுத்து விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள்முன்னிலையாகினர்.