யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய எஸ். பிரேமராஜன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையான நபர் கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.