பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பதிலளித்துள்ளார்.
அமைச்சர்களின் ஆலோசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் ஒருவர் 45 ஆலோசர்களை அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தால் அது தவறானது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும், அவ்வாறு தாம் 45 ஆலோசகர்களை கடமையில் ஈடுபடுத்தவில்லை என அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
டொக்டர் விமல் குணவர்தன என்னும் ஒரே ஒருவரே பெருந்தெருக்கள் அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய அனைவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விடயம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் பிரதி அமைச்சரின் கேள்விக்காக மீளவும் தெளிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்திப் பணிகள் சவால் மிக்கது எனவும் இதற்காவே அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
135
Spread the love
previous post