பொலிவியாவில் பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிவிய அதிகாரிகள் சுமார் ஏழு தொன் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்காக இந்த பொதைப் பொருள் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
கனியப்பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளில் இந்த போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 350 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் அதிகளவில் கொக்கேய்ன் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் பொலிவியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு இடங்களையும் பேரு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வகிக்கின்றன.
பொலிவியாவில் பாரியளவு கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்பு:
40
Spread the love
previous post