341
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில் இருந்து பெறுமதியான அம்மன் சிலை உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன.
வழமை போன்று இன்றைய தினம் புதன்கிழமை , பூசகர் ஆலயத்தை திறந்து பூஜை வழிபாடுகளை செய்ய முயன்ற போதே , நேற்றைய தினம் இரவு ஆலயத்தினுள் திருடர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து பூசகர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டில் , சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நாலடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை , அம்மன் தாலி மற்றும் அம்மனின் தேடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை, உண்டியலில் இருந்த ஒரு தொகை பணம் என்பவற்றையே திருடி சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
Spread the love