398
யாழ்.குடாநாட்டுக்கு சென்றுள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு சென்றுள்ளாா்.
அதன்போது, நயினாதீவுக்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார். அதன்போது, உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
Spread the love