Home இந்தியாவிவசாயிகள் தற்கொலையை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by admin

விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுமை தொடர்பாக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு இன்றையதினம்  விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையாகி சட்டத்தரணி  வறட்சி மற்றும் புயலால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு இழப்பீடு தொகை வழங்கினாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என  நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.  கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இதனை ஏற்றுக் கொண்ட  நீதிபதிகள்  விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும்  இழப்பீடு வழங்குவது மட்டும் போதாது எனவும்  அந்த குடும்பங்கள் படும் துயரங்களை நினைத்து பார்த்து தற்கொலைகளை  தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன்   அதற்கு 2 வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை  எதிர்வரும் 27ம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More