313
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இரண்டாவது நாளாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (01) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரோம் பெர்னாண்டோ சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்துவிட்டு நாடு திரும்பி நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love