Home இலங்கைஅச்சுவேலியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

அச்சுவேலியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விற்பனை நிறுவனம் ஒன்றின் பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் மற்றையவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி  காவல்துறையினா்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More