518
யாழில். ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை , முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து , தனக்கு தாக்க முற்றப்பட்ட போது , அயலவர்கள் கூடியமையால் , தாக்குதல் முயற்சியை கைவிட்டு , மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு , அங்கிருந்து சென்றதாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த நிலையில் , அதனை அகற்ற கோரியே குறித்த கும்பல் மிரட்டியது என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன
Spread the love