348
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.
அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என கூறினார்.
அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய வைத்தியர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு, கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
Spread the love