Home இலங்கைமாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை!

மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை!

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம்.!

by admin

மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும். அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More