295
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love