443
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டிற்கு விரைந்த காவற்துறையினர் வீட்டினை முற்றுகையிட்டு , தேடுதல் நடத்தினர்.
அதன்போது வீட்டினுள் இருந்த அலுமாரி ஒன்றினுள் இருந்து , 30 போத்தல் கசிப்பினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து வீட்டில் இருந்த பெண்ணை கைது செய்த பொலிஸார் சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love