Home இலங்கையாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்!

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்!

by admin

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா எனும் சிறுமி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

குறித்த சிறுமி, தனது பெற்றோருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பவுள்ளார்.அவரை வரவேற்க அரியாலை மக்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு , இசை நிகழ்வும் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக ஊரவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More