Home இலங்கையாழ். சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு!

யாழ். சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஜெகநாதன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் காவற்துறையினர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More