இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பான் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மீள் அபிவிருத்தி திட்டத்தை விரைவாக மீள ஆரம்பிப்பது குறித்தும் தகவல்-தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கடல்சார்-பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
விரைவாக விமான நிலைய அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்பது குறித்தும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையில் புகையிரப் போக்குவரத்தை விரிவாக்க ஜப்பானின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் (11-12.01.24) மேற்கொண்டு இலங்கை சென்ற ஜப்பான் நிதி அமைச்சர் சுஸுகி, நேற்று (12.01.24) மீண்டும் ஜப்பான் நோக்கி பயணமானார்.