430
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த பயணிகள் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டுள்ளனர் . தனியார் நிறுவனம் ஒன்றின் (பிக் மீ) ஊடாக போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனக்கு வந்த அழைப்பின் பிரகாரம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சென்று , அங்கிருந்து பயணிகளை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
அதன் போது அங்கு வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி , பயணிகளை ஏற்ற வந்த சாரதியையும் , அதில் இருந்த பயணியையும் தாக்கியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சாரதி கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுக்கு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கட்டணமானிகள் இன்றியே முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டணம் அறவிட்டு வந்தனர் , நீண்ட காலத்தின் பின்னர் யாழில் தற்போது கட்டணமானிகள் பெருத்திய சில முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன் , தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் போக்குவரத்து சேவைகளில் சில முச்சக்கர வண்டிகள் இணைந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் கட்டணமானிகள் பொருத்தாத மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினருடன் இணையாத முச்சக்கர வண்டி சாரதிகள் , மற்றைய சாரதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 05க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதில்லை எனும் குற்றச்சாட்டு சாரதிகள் மத்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love