418
தனது மனைவியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியைத் தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்வம் தொடர்பில் குறித்த நபா் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love