461
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சியினர் சில திருத்தங்களை பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னர் சட்டத்தை சபாநயாகர் அங்கீகரிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில கால தாமதங்களுக்கு பின்னர் தற்போது சட்டத்தை சபாநாயகர் கையொப்பமிட்டு அங்கீகரித்துள்ளார்.
Spread the love