Home இலங்கைஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை ஜனாதிபதி சந்தித்தார்!

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை ஜனாதிபதி சந்தித்தார்!

by admin

07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More