Home இலங்கைநிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம்: முதலாவது நபர் கைது!

நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டம்: முதலாவது நபர் கைது!

by admin

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார்.

சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் ​அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் தங்களையும், அரசாங்கத்தின் செயல்களையும், பதில் ​ காவற்துறை மா அதிபர் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றார்’எனவும்,  இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை (நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்) அரசாங்கம் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க கூட அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரமே இணைய பாதுகாப்பு சட்டம் பிரச்சினையாக இருக்கும் என டிரான் அலஸ்  தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More