கத்தார் மரண தண்டனை விதிக்கட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சு வெளியட்டுள்ள செய்திக்குறிப்பபில் தொிவிக்கப்பட்டுள்ளது
தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர் எனவும் இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை தாங்கள் வரவேற்கிறோம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இந்தியக் கடற்படையினர் கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டிருந்தது இரு நாடுகளுக்கிடையே அரசுமுறை பதற்றத்தை அதிகரித்து வந்திருந்ததுடன் இந்த இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
எனினும் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்த முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகச் செய்திகள் வெளியிட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது