Home இலங்கைவவுனியா ஓமந்தை விபத்தில், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மரணம்!

வவுனியா ஓமந்தை விபத்தில், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மரணம்!

by admin

வவுனியா ஓமந்தையில் இன்று (27.03.24) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் பலியானார்.

விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும், கப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More