Home இலங்கைஅனலைதீவில், இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்துள்ளது!

அனலைதீவில், இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்துள்ளது!

by admin

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் நேற்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More