பாத யாத்திரையினால் பாதிப்பு எதுவும் கிடையாது – கயந்த கருணாதிலக்க:-
மேடைகளில் ஏறி தேவதை கதைகளைச் சொல்லி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி பாத யாத்திரை நடத்துவதன் மூலமோ அல்லது அரசியல் மேடைகளில் ஏறி தேவதை கதைகளை பேசுவதனால் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியின் போது அதிகளவு நிவாரணங்களை வழங்குவது குறித்து மீள சிந்திக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் வரி செலுத்துவோரை மீளவும் மீளவும் நெருக்கடியில் ஆழ்த்துவதனை விடுத்து, வரிச் செலுத்தாதவர்களை கிரமமாக வரிச் செலுத்த வைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையினால் பாதிப்பு எதுவும் கிடையாது – கயந்த கருணாதிலக்க:-
கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் கூட்டு எதிர்க்கட்சியினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஊடாக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் நிலை பற்றி அறிந்துகொண்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாத யாத்திரை போராட்டத்தினால் மஹிந்த தரப்பினர் மேலும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லட்சக் கணக்கான மக்களை கொண்டு வருவதாக பிரச்சாரம் செய்த கூட்டு எதிர்க்கட்சியினரால் அதனை செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரிடம் கெம்பல் மைதனத்தை கோரியிருந்தனர் எனவும் ஜனாதிபதியுடன் பேசி பிரதமர் கெம்பல் மைதானத்தைப் பெற்றுக்கொடுத்த போதிலும், இறுதியில் மூன்று நான்கு ஆயிரம் பேரை உள்ளடக்கக் கூடிய லிப்டன் சுற்று வட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சி கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.