35
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி வரையில் பியசேனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பியசேன, அரசாங்கத்திடம் வாகனத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அந்த வாகனத்தை மீளவும் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 29ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பியசேனவை கைது செய்திருந்தனர்.
Spread the love