195
யாழ்ப்பாணத்தில் தொழில் போட்டி காரணமாக முதியவர் மீது தாக்குலை மேற்கொண்டு , அவரது வீட்டினையும் , வாகனத்தினையும் சேதப்படுத்திய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டின் மீதும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனத்தினையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 70 வயதுடைய முதியவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி காவல்துறையினர் , வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தில் இருவரை கைது செய்துள்ளனர். ஏனையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
காயமடைந்த முதியவரின் பேரன் (மகனின் மகன்) வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடுபவர் என்றும் , அந்த தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையே தாக்குதலுக்கு காரணம் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Spread the love