155
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் , மருத்துவர்கள் , தாதியர்கள் , நோயாளிகளுடன் முரண்பட்டனர்.
அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால் , யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
Spread the love