அச்சுறுத்தப்பட்டு வரும் நிலை நிறுத்தப்பட வேண்டுரும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்களது உறவினர்கள், இதுகுறித்து சர்வதேச மருத்துவக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களது கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஒருவர், இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
அத்தோடு, முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் இதன்போது பலர் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நல்லிணக்க பொறிமுறை செயலணியின் கருத்தறியும் நிகழ்வு இன்று பூநகரியில் :-
நல்லிணக்க பொறிமுறை செயலணியின் கருத்தறியும் நிகழ்வு இன்று பூநகரியில் ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை செயலணியினரின் மக்கள் கருத்தறியும் நிகழ்வு பூநகரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை காலை 9.00 மணிக்கு பூநகரி பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது .
இதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு எற்பட்ட இழப்புக்கள் தொடர்பாகவும் காணாமல் போனோரை கண்டறிதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல், முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பிலான விசாரணை, போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்ககளை மக்கள் குறித்த செயலணியிடம் கருத்துக்களை முன்வைத்து ள்ளனர் இதுவேநல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.