ஒரு பயணத்தடை தொடர்பான புதிய உத்தரவொன்றில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 7 முஸ்லிம் நாடுகளுக்கு அவர் விதித்த பயணத்தடை தொடர்பான உத்தரவுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன. இந்தநிலையில் புதிய உத்தரவொன்றில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். முன்பு தடைசெய்யப்பட்ட 7நாடுகளின் பட்டியிலில் இருந்து தற்பொழுது ஈராக் நீக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவில் ஈரான், சூடான், சிரியா, லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டமானது எதிர்வரும் மார்ச் 16ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.