வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது. உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்இ அணு ஆயுதங்களையும்இ கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றார்.
இந்நிலையில்இ கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
இதைப் போன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை வட கொரியா கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ள நிலையில் இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் இது தொடர்பாக விவாதிக்கவும்இ ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது.