180
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்வையாளர் நேரம் அல்லாத நேரத்தில் மூவரும் பார்வையிட செல்ல முற்பட்ட வேளை , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால் மூவரும் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , வைத்தியசாலைக்கு அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர். அது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால்,யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முரண்பாட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ReplyForward
|
Spread the love