197
மன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை ஆட்கள் இல்லாத நிலையில் மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகில் வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட நிலையில்,படகினுள் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்களும் காணப்படுகின்றது.சௌத்பார் கடற்படையினர் குறித்த படகை மீட்டுள்ளதோடு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் படாக ? அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து காற்றுக்கு அடித்து வரப்பட்டதா? என்பது குறித்து கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love