குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
பாத யாத்திரை குறித்து மத்திய செய்குழு தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாத யாத்திரையில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் கூக்குரல் எழுப்பி அதிருப்தி வெளியிட்டமை, பாத யாத்திரையில் பங்கேற்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.