Home இலங்கைசிறுவயது காதலர்கள் மீண்டும் கைது!

சிறுவயது காதலர்கள் மீண்டும் கைது!

by admin

சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.

அந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியவர்கள், மீண்டும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த காவற்துறையினர் இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More