169
நாட்டின் சகல பல்லைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இதனை தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினம் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினமும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். இந்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love