Home இலங்கைவிடுதலைப் புலிகள் போன்று, காட்டு யானைகள் நடந்து கொள்கின்றன என்கிறார் விமலவீர!

விடுதலைப் புலிகள் போன்று, காட்டு யானைகள் நடந்து கொள்கின்றன என்கிறார் விமலவீர!

by admin

காட்டு யானைகள் விடுதலைப் புலிகள் போன்று நடந்து கொள்வதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை,வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (06.06.24) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி பதிலளித்துக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட அவர்,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.காட்டு யானைகளினால் வருடாந்தம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றன. மனித உயிர்கள் பல இழக்கப்படுகின்றன யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும் போது டொலர்களில் நிவாரணம் பெறும் தரப்பினர் நீதிமன்றத்தை நாடி முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகளுக்கு தடையுத்தரவை பெற்றுக் கொள்கிறார்கள்.

யானைகளுக்கு குழிகள் வெட்டும் திட்டத்தை தான் ஆரம்பித்ததாகவும், யானைகளுக்கு ஆதரவாக தடையுத்தரவு பெறும் தரப்பினரது வீடுகளை யானைகள் தாக்குவதில்லை.வழக்கு தாக்கல் செய்பவர்களின் வீடுகளையும் யானைகள் தாக்குவதில்லை.அப்பாவி மக்களின் வீடுகளை தான் யானைகள் தாக்குகின்றன.இறுதியில் யானைகளும் உயிரிழக்கின்றன.மனிதர்களும் உயிரிழக்கிறார்கள் இது தேசிய பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ளார்.

காட்டு யானைகள் விடுதலைப்புலிகள் போன்று நடந்து கொள்கின்றன இதனால் பிரதேசவாசிகள் தமது கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள்.இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை, வீதியில் செல்ல முடியவில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு கூட செல்ல முடியவில்லை. யானைகள் பொதுமக்களை அடித்துக் கொல்கின்றன

விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டுமானால் யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் இதற்கு சிறந்த திட்டமில்லை எனவும் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More