235
யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2024” இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது . யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக காவல் நிலைய வீதி, சென்று பொது நூலக முன்பாக நிறைவடைந்தது.
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Spread the love