212
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 135 கிலோ எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவற்றினை மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love